தென்னவள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு-உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு !

Posted by - April 1, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மாகாணசபை தேர்தல்கள் இந்தவருடம் இல்லை-அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

Posted by - April 1, 2025
மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது எனஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால்  ஆறுமாதத்திற்குள் இலங்கைமூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவன் மீது பகிடிவதை

Posted by - April 1, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய…
மேலும்

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்

Posted by - April 1, 2025
2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை  (01) காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பித்த  நிகழ்வுகள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து  இடம்பெறவுள்ளன.
மேலும்

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

Posted by - April 1, 2025
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று…
மேலும்

புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை

Posted by - April 1, 2025
மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

புளியங்குளத்தில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Posted by - April 1, 2025
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

காத்தான்குடி – நூராணியா பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது

Posted by - April 1, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிகுட்பட்ட நூராணியா பகுதியில் 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நால்வர் காயம்

Posted by - April 1, 2025
தெற்கு அதிவேக வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பெண் நோயாளிகளை படம்பிடித்த அறுவை சிகிச்சை நிபுணர் கைது – ஜேர்மனியில் சம்பவம்

Posted by - April 1, 2025
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத்தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக்  குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யபட்டுள்ளார்.
மேலும்