நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் ‘ரஜலுணு’ உப்பு உற்பத்தி இன்று(29.03.2025)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான…
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.…
திமுக எம்எல்ஏ-க்களை போல் உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக கூறினார்.
விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சரிடம் பெண் ஒருவர் திடீரென எழுந்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அமைச்சர் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றார்.
“தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது” என காவேரிப்பட்டணத்தில் நடந்த திமுக இளைஞரணி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.